Delhi CM: டெல்லி முதல்வர் ரேகாவை தாக்கிய குஜராத் இளைஞர் கைது; நடந்த சம்பவத்திற்க...
அசோக் செல்வன், நிமிஷா நடிப்பில் புதிய படம்!
நடிகர்கள் அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
நடிகர் அசோக் செல்வன் தமிழில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அதேபோல், சித்தா மற்றும் டிஎன்ஏ திரைப்படங்களில் நடித்து அசத்திய நிமிஷா சஜயன் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இவர்கள் இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை சிபி மணிகண்டன் என்பவர் இயக்குகிறார்.
குட் நைட், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற திரைப்படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் பிக்சர்ஸ் நிறுவனம் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.
இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. படத்தில் இணையும் பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: ஜெயிலர் வசூலைக் கூலி முறியடிக்குமா? திருப்பூர் சுப்பிரமணியம் பதில்!