ஒண்டிவீரன் நினைவு நாள்: எடப்பாடி கே. பழனிசாமி மரியாதை!
சுதந்திரப் போராட்ட வீரரான ஒண்டிவீரனின் 254 ஆவது நினைவு நாளையொட்டி, ராணிப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி்சாமி ஒண்டிவீரன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 254-ஆவது நினைவு நாள் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தனியார் விடுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்து அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மலர்தூவிதூவி மரியாதை செலுத்தினார்.
இதில் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், நெற்கட்டும் செவல் பகுதியைச் சோ்ந்த ஒண்டிவீரன் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த முதல் சுதந்திரப் போராட்ட வீரா் ஆவாா். பூலித்தேவன் படையில் தளபதியாக இருந்த இவா், ஆங்கிலேயப் படைகளைத் தனியாகச் சென்று அழித்ததால், ஒண்டிவீரன் என அழைக்கப்பட்டாா்.
பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் நினைவாக 2016 ஆம் ஆண்டு மணிமண்டபம் கட்டப்பட்டு, அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. 1771 ஆம் ஆண்டு இயற்கை எய்திய ஒண்டிவீரனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20-ஆம் நாள் நினைவு நாள் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணை 5-ஆவது முறையாக நிரம்பியது!