Delhi CM: மனு கொடுக்க வந்த நபர் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல...
தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை
திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியில் அப்சல் கான் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாமக முன்னால் நகர செயலாளர் ஆவார்.
மதமாற்றம் தொடர்பான மோதலில் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குறிச்சி மலையைச் சேர்ந்த முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஷ்வான், அசாருதின் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. என்ஐஏ தனியாக வழக்குப் பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், ராமலிங்கம் கொலை வழக்குத் தொடர்பாக சென்னை, திண்டுக்கல், கொடைக்கானல், தென்காசி உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் ஜின்னா நகர் பகுதியில் உள்ள எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா வீடு, ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த யூசிப் வீடு மற்றும் கொடைக்கானல், நிலக்கோட்டையிலும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ராமலிங்கம் கொலை வழக்குத் தொடர்பாக நான்கு மாதங்களுக்கு முன்பு கொடைக்கானலில் சோதனை நடைபெற்றது.