ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது நன்றியற்றது: அஸ்வின் ஆதங்கம்!
``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்திய அரசு அதிரடி
இன்று நாடாளுமன்றத்தில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கலை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
இதில் முக்கியமாக பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றங்களில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால், 31-ஆவது நாள் அவர்கள் பதவிநீக்கம் செய்யப்படுவர். இதற்கு முன்பு வரை முதல்வர் அல்லது அமைச்சர்களுக்கு நீதிமன்றங்கள் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தால் மட்டுமே அவர்கள் பதவியை இழப்பார்கள்.
இதற்காக யூனியன் பிரதேச அரசு திருத்த மசோதா 2025, அரசமைப்பு (130- ஆவது திருத்தம்) மசோதா 2025, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2025 ஆகிய 3 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேறினால், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிக்காலத்தில் தொடர்ந்து 30 நாட்கள் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டால், 31-வது நாளில் அவர்கள் தானாகவே பதவியை இழப்பார் என்று கூறப்படுகிறது.
அரசியலமைப்பு ஒழுக்கத்தைப் பாதுகாக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீதான நம்பிக்கையை உறுதி செய்யவும் இச்சட்டம் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs