செய்திகள் :

``கூட்டணி அழுத்ததால் நம்பி நிற்கும் மக்களுக்கு அநீதி இழைக்கிறார் திருமா!" - NTK வெண்ணிலா தாயுமானவன்

post image

"தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்கள் போராட்டத்தையும் பேச்சுவார்த்தையும் முன்னெடுத்த நிலையில் அது தோல்வியில் முடிந்திருக்கிறதே!"

"தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை கையாள்வதில் தி.மு.க அரசுதான் அப்பட்டமாக தோற்றிருக்கிறது, அதிலும் காவல்துறை செயல்பட்டவிதம் மிகக் கொடூரமானது. அரசை எதிர்த்து கேள்வி கேட்ட காரணத்திற்காக இரு தோழர்கள் மீது மனிதத்தன்மையற்ற முறையில் தாக்குதல் நடத்தியிருக்கிறது தி.மு.க அரசு. அண்ணன் சீமான் தூய்மைப் பணியாளர்களை மண்டபங்களில் சென்று சந்திக்க சென்றபோது நா.த.க உறவுகளையும் தாக்கினர். இதற்கிடையில் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு திட்டத்தையும் அறிவிப்பதுபோன்றும், நன்றி தெரிவிப்பதாகவும் அபத்தமான நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். அரசு கட்டுப்பாட்டின் கீழ் இல்லாது தனியார்மயமான தூய்மைப் பணியாளருக்கு எப்படி இந்தத் திட்டங்கள் சென்றடையும். “பணியே கேள்விக்குறியாக உள்ளபோது அதற்கு நலத்திட்டம் என்பது மக்களை முட்டாளாக்குவதானே. புதிய 6 நலத்திட்டங்கள் வேண்டாம் மக்களுக்கு தேவையான 2 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதில் போராட்டக் குழுவுடன் இணைந்து நாம் தமிழர் கட்சியும் உறுதியாக நிற்கும்"

போராட்டக்காரர்களை கைது செய்த தமிழக காவல்துறை!

"13 நாட்கள் போராடியபோதே செவிசாய்க்காத அரசு, போராட்டம் முடிந்த பிறகு செவிசாய்க்கும் என எதனடிப்படையில் நம்புகிறீர்கள்?"

"தி.மு.க அரசு சென்னை மாநகராட்சியில் நடந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் 'மாநிலம் முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்களை ஒன்றுதிரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த நாங்கள் தயாராகவுள்ளோம்' என்று அண்ணன் சீமான் குறிப்பிட்டுள்ளார். நியாயத்துக்காகப் போராடிய மக்களை இரக்கமின்றி் அடித்து, ஒடுக்கி, கைது செய்து, தனியார் முதலாளிகளுக்குத் துணைபோகும் திராவிட மாடல் ஆட்சியை 2026-ல் மக்கள் துடைத்தெறியத்தான் போகிறார்கள்"

திருமாவளவன்

“தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்துவது, ‘காலம் முழுக்க குப்பை அள்ளட்டும்’ என்ற சூழலுக்கு இட்டுச்செல்லும் என்கிறார்களே?”

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தால் சிக்கலில் மாட்டியிருக்கும் தி.மு.க-வை காப்பாற்றவே இந்த கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் அண்ணன் திருமாவளவன். இது அவரை நம்பி நிற்கும் மக்களுக்கு அவர் இழைத்த அநீதி என்பேன். எதற்காக தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராடுகிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். தூய்மைப் பணி தனியார்மயமாக்கப்பட்டால், அதனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட அனைத்தும் அவருக்குத் தெரிந்தும், கூட்டணி தர்மமும் நெருக்கடியும் காரணமாக இவ்வாறு பேசி வருகிறார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பும், உரிய ஊதியமும் கிடைக்கும் போதுதான், குழந்தைகளின் கல்வி மேம்பாடு மற்றும் வாழ்வாதார முன்னேற்றம் சாத்தியம் ஆகும். பணி நிரந்தரம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களுடன் ஒப்பிடும்போது, தனியார்மய தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியமும் இதர உரிமைகளும், மருத்துவ பரிசோதனைகளுமே முறையாக கிடைக்காத அவல நிலைதான் நீடிக்கிறது. இந்நிலையிலே, 'பணி நிரந்தரம் வேண்டாம்' என்ற கருத்தை ஒருபோதும் ஏற்க முடியாது."

``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்திய அரசு அதிரடி

இன்று நாடாளுமன்றத்தில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கலை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் முக்கியமாக பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக... மேலும் பார்க்க

இன்று நாடாளுமன்றத்தில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல்; என்னென்ன மசோதாக்கள், அவை எதற்காக?

3 முக்கிய மசோதாக்கள்இன்று நாடாளுமன்றத்தில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கலை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. குற்றங்களில் ஈடுபடும் பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஆகியோரை பதவி நீ... மேலும் பார்க்க

TVK: தவெக மாநாட்டு பேனரில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் ஏன்? - தவெக நிர்மல்குமார் பதில்

மதுரை தவெக மாநாடுமதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நாளை ஆகஸ்ட் 21-ம் தேதி நடக்கவுள்ளது. 500 ஏக்கரில் மாநாட்டுக்கான திடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 10 லட்சம் தொண்டர்க... மேலும் பார்க்க

₹33,000 கோடி சந்தையை கட்டுப்படுத்தப் போகும் சட்டம்; `ஆன்லைன் கேமிங் மசோதா' - ஏன்? எதற்காக?

ஆன்லைன் கேமிங்இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை வேகமாக வளர்ந்து வரும் சூழலில், பணவிளையாட்டுகள் மூலமாக சமூக - பொருளாதார சிக்கல்கள் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு, மத்திய அரசு ‘ஆன்லைன் கேமிங் ஊக்குவிப... மேலும் பார்க்க

சென்சார் போர்டை எதிர்த்து வெற்றிமாறன் போட்ட வழக்கு; மனுஷி படத்தை பார்வையிடும் நீதிபதி

மனுஷி படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் தாக்கல் செய்த வழக்கில், படத்தை ஆகஸ்ட் 24 ஆம் தேதி பார்வையிட உள்ளார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர்: ’அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரை.!’ - கார்கே வீட்டு கூட்டத்தின் பின்னணி

துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரை நிறுத்த இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குடியரசு துணைத் தலைவர் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன... மேலும் பார்க்க