ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது நன்றியற்றது: அஸ்வின் ஆதங்கம்!
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440-க்கு விற்பனையாகிறது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், ஆகஸ்ட் 6 ஆம் தேதி பவுன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. 8 ஆம் தேதி பவுன் ரூ.75,760 என புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது.
அதன் பின்னர் தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. திங்கள்கிழமை பவுன் ரூ.74,200-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.9,235-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.73,880-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், புதன்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9,180-க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.125-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 குறைந்து ரூ.1.25 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.