செய்திகள் :

திருப்பனந்தாள் மடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தியடைந்தார்

post image

தஞ்சாவூர்: திருப்பனந்தாள் மடத்தின் 21 ஆவது அதிபரான ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் செவ்வாய்க்கிழமை முக்தி அடைந்தார். அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா திருப்பனந்தாளில் காசிமடம் என்னும் பெயரில் சைவம் தமிழ், கலை, இலக்கிய சமூக, சமுதாயப் பணிகளை ஆற்றிவரும், அறம் வளர்க்கும் அருள் நிலையம் உள்ளது. இந்த மடத்தின் 21 ஆவது பீடாதியாக "கயிலை மாமுனிவர்", ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் (95). இவர் 1958 முதல் துறவேற்று, சிறிது காலம் ஸ்ரீகாசி மடத்தின் இளவரசாகப் பணிபுரிந்து, கடந்த 1972 இல் ஸ்ரீகாசி மடத்தின் பீடாதியானார். சைவம், தமிழ் இரண்டையும் இரண்டு கண்களாகப் போற்றி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, திருமுறைகளை நாள்தோறும் இடையீடின்றிப் பாராயணம் செய்து வந்தார். 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையும், பெருமையும் மிக்க காசிமடம் வரலாற்றில், மடத்தினை பல்வேறு விரிவாக்கம் பெற முக்கிய காரணமாக இருந்தார். மடத்தின் வளர்ச்சி கண்டு பொற்காலம் என பலரும் பாராட்டும் வகையில் மேம்பாடு அடைய செய்தார்.

இந்நிலையில், ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமிகள், கடந்த ஒரு மாதமாக வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில், திருப்பனந்தாள் மடத்தில் செவ்வாய்க்கிழமை முக்தி அடைந்தார்.

இந்நிலையில், ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி முக்தி அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மக்கள், முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். புதன்கிழமை ஆதீனங்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதாக காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை கண்டெடுப்பு

SriLasri Muthukumara Swami Thambiran Swamigal, the 21st president of Thiruppanandal Mat, attained liberation on Tuesday. Following this, a large number of devotees are paying their respects.

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440-க்கு விற்பனையாகிறது.ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில்,... மேலும் பார்க்க

விருத்தாசலம் அருகே கார் விபத்தில் 3 பேர் பலி; 3 பேர் காயம்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே புதன்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர், 3 பேர் காயமடைந்தனர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம் எருமனூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன், ஆதினேஷ், வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சியில் அப்சல் கான் என்பவரது வீட்டில் ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை 5-ஆவது முறையாக நிரம்பியது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அதன் முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் ஐந்தாவது முறையாக நிரம்பியுள்ளதால், காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.9 அடியாக புதன்கிழமை காலை உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 120.9 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,16,683 கன அடியாக ... மேலும் பார்க்க

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன்

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன். அவா் கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருப்பது தன்னுடைய சம்பந்தப்பட்டவா்கள் எம்.பி, எம்எல்ஏ ஆகவேண்டும் என்பதற்கு மட்டும் தான் என மத்திய இணையமைச்சா் எ... மேலும் பார்க்க