செய்திகள் :

தில்லி முதல்வரை தாக்கியவர் நாய் பிரியரா..? கைதானவரின் பின்னணி என்ன?

post image

தில்லி முதல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்ட விவகாரத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில், புதன்கிழமை காலை நடைபெற்ற மக்களின் குறைகளை கேட்கும் ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சியின்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதல்வர் ரேகா குப்தாவை தலை முடியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில், முதல்வர் ரேகா குப்தா தலை, கன்னத்தில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குறைகேட்பு நிகழ்வின் போது முதல்வர் ரேகா குப்தா மீது நடந்துள்ள இந்தத் தாக்குதல் சம்பவத்தை தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கடுமையாகக் கண்டித்துள்ளார். முதல்வர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

முதல்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர் குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த 41 வயதான ராஜேஷ் பாய் சக்காரியா என்றும், அவர் ஒரு ‘நாய் பிரியர் (Dog Lover)’ என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது உறவினர் தில்லி திகார் சிறையில் உள்ளதால், அவரைப் பார்ப்பதற்காக அவர் தில்லி வந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகின்றனர்.

இதுதொடர்பாக தாக்குதல் நடத்திய ராஜேஷ் பாய் சகாரியாவின் தாயார் பானு செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராஜேஷ் ஒரு நாய் பிரியர், சமீபத்தில் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பில் அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.

ரிக்‌ஷா ஓட்டுநரான ராஜேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் சில நேரங்களில் வீட்டிலும் சிலரைத் தாக்குவார்” எனத் தெரிவித்தார்.

சமீபத்தில், தில்லியிலும் சுற்றியுள்ள புறநகர்களிலும் திரியும் தெருநாய்களை எட்டு வாரங்களுக்குள் பிடித்து நிரந்தரமாகப் காப்பங்களில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதற்கு தில்லி முதல்வர் ரேகா குப்தா முதலில் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், பின்னர் தெரு நாய்கள் மீது கடுமையான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Delhi CM Rekha Gupta Attacked By Dog Lover Upset With SC Order? Here's What His Mother Told Police

இதையும் படிக்க : தில்லி முதல்வர் மீது தாக்குதல்: குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு!

கேரளத்தில் சிறுமி பலி: மூளையைத் தின்னும் அமீபா உடலுக்குள் எப்படி நுழைகிறது?

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் 9 வயது சிறுமி மரணமடைந்துள்ளார். மேலும் ஒரு 3 மாதக் குழந்தை மற்றும் 40 வயது நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். கேரளத்தில் ... மேலும் பார்க்க

ஆக. 22ல் பிகாரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 22ல் கயாஜி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து பேரணியில் உரையாற்ற உள்ளதாக துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி புதன்கிழமை தெரிவித்தார். பிரதமரின் விழாவிற்கான ஏற்பாடுக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை!

நாடாளுமன்றத்தில் வளாகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் புகைப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீ... மேலும் பார்க்க

தே.ஜ. கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கர் ஜூலை 21-இல் தனது ... மேலும் பார்க்க

அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் குறிக்கோள்! ராகுல் உருக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உருக்கமான கருத்தை பகிர்ந்துள்ளார்.நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 3 - 12 வகுப்புகளுக்கு சிறப்பு பாடத் தொகுப்பு!

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் இரண்டு சிறப்பு பாடத் தொகுப்புகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஆர்டிசி) வெளியிட்டுள்ளது.’ஆபரேஷன் சிந்தூர் -... மேலும் பார்க்க