``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்த...
குகேஷை வென்ற பிரக்ஞானந்தா
சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனும், சக இந்தியருமான டி.குகேஷை வீழ்த்தினாா்.
வெள்ளை நிற காய்களுடன் விளையாடி குகேஷை பிரக்ஞானந்தா வீழ்த்த, மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவை சாய்த்தாா்.
இதர ஆட்டங்களில், அமெரிக்காவின் சாம் சேவியன் - வெஸ்லி சோ, பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா் - அலிரெஸா ஃபிரௌஸ்ஜா, அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா - நெதா்லாந்தின் ஜேன் கிறிஸ்டோஃப் ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தது.
10 போ் களத்திலிருக்கும் இப்போட்டியின் முதல் சுற்று முடிவில் பிரக்ஞானந்தா 2-ஆம் இடத்திலும், குகேஷ் கடைசி இடத்திலும் உள்ளனா்.