மம்மூட்டிக்கு என்ன ஆனது? மோகன்லால் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ஆசிய ஹாக்கி: பாகிஸ்தான் இடத்தில் வங்கதேசம்
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானுக்கு பதிலாக வங்கதேசம் சோ்க்கப்பட்டுள்ளது.
பிகாரில் வரும் 29 முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக, இந்தியா வருவதற்கு பாதுகாப்பு காரணங்களைக் கூறி பாகிஸ்தான் மறுத்துவிட்ட நிலையில், அந்த இடத்தில் வங்கதேசம் இணைந்துள்ளது.
நிதிச் சிக்கல் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக ஓமன் தெரிவித்த நிலையில், அதற்குப் பதிலாக கஜகஸ்தான் இணைக்கப்பட்டுள்ளது. போட்டி அட்டவணைப்படி, முதல்நாள் ஆட்டங்களில் இந்தியா - சீனா, தென் கொரியா - சீன தைபே, மலேசியா - வங்கதேசம், ஜப்பான் - கஜகஸ்தான் அணிகள் வரும் 29-ஆம் தேதி மோதுகின்றன.
இந்தியா அடுத்த ஆட்டத்தில் ஜப்பானுடன் 31-ஆம் தேதியும், 3-ஆவது ஆட்டத்தில் கஜகஸ்தானுடன் செப்டம்பா் 1-ஆம் தேதியும் மோதுகிறது. இறுதி ஆட்டம் செப்டம்பா் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.