‘வாட்ஸ்அப்’ மூலம் 50 சேவைகள்; மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தமிழக அரசு!
Online Gaming Bill: எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் ஆன்லைன் கேமிங் மசோதா! - விவரம் என்ன?
மழைக்கால கூட்டத்தொடர் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. நாளையுடன் (21-ம் தேதி) கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு மத்தியில், ஆன்லைன் கேமிங்கைத் தடைசெய்து ஒழுங்குபடுத்தும் மசோதாவை மக்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்தினார்.
ஏற்கெனவே தமிழ்நாடு, ஹரியானா, தெலங்கானா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்தும் விதமாக தனித்தனிச் சட்டங்கள் உள்ள நிலையில், மத்திய அரசு ஒரே சட்டமாக கொண்டு வர இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த மசோதா இ-ஸ்போர்ட்ஸ், கல்வி மற்றும் சமூக விளையாட்டுகளை ஊக்குவித்து ஒழுங்குபடுத்துகிறது. ஆன்லைன் சூதாக இருக்கும் பணவிளையாட்டுகள் அதன் விளம்பரங்களைத் தடைசெய்கிறது.
மேலும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும், அதை விளம்பரப்படுத்துபவர்களுக்கும் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க பரிந்துரைக்கிறது.
இந்த மசோதா இளைஞர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை சமூக–பொருளாதார பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என மத்திய பா.ஜ.க அரசு தெரிவித்திருக்கிறது.
இந்த மசோதா அறிமுகப்படுத்தப் பிறகு, சபாநாயகர் மசோதா குறித்த கருத்துக்களை தெரிவிக்குமாறு காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரியிடம் கேட்டுக் கொண்டார்.
ஆனால், 'பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி' குறித்து சபை முதலில் விவாதம் நடத்தியப் பிறகே மற்றவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.