விவோ, ஓப்போவுக்கு போட்டியாக ரியல்மீ பி 4!
விவோ, ஓப்போவுக்கு போட்டியாக ரியல்மீ பி 4 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. ரியல்மீ பி 4 மற்றும் ரியல்மீ பி 4 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவற்றின் சிறப்பம்சங்கள், சமீபத்தில் விவோ, ஓப்போ நிறுவனங்களின் தயாரிப்புகளுக்குப் போட்டியாக மேம்பட்ட அம்சங்களுடன் வெளியாகியுள்ளது.
மத்திய தர விலையில், மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் கூடுதல் பேட்டரி திறன், மேம்படுத்தப்பட்ட புராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதன் சிறப்புகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்ளலாம்.
ரியல்மீ பி 4 மூன்று வேரியன்ட்களில் சந்தைகளில் அறிமுகமாகியுள்ளன.
6GB உள்நினைவகம் 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 18,499
8GB உள்நினைவகம் 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 19,499
8GB உள்நினைவகம் 256GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. Rs 21,499
இதேபோன்று ரியல்மீ பி 4 ப்ரோவும் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கின்றன.
8GB உள்நினைவகம் 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 24,999
8GB உள்நினைவகம் 256GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. Rs 26,999
12GB உள்நினைவகம் 256GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ Rs 28,999
இவற்றின் விற்பனை ஆக. 27 நண்பகல் 12 மணி முதல் தொடங்கவுள்ளது.
சிறப்பம்சங்கள் என்னன்ன?
ரியல்மீ பி 4 ப்ரோ ஸ்மார்ட்போன், 6.8 அங்குல எச்.டி. திரை கொண்டது. திரை பயன்படுத்த சுமுகமாக இருக்கும் வகையில் 144Hz திறனுடையது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 6500nits திறனும் கொரில்லா கிளாஸ் 7ஐ பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்நாப்டிராகன் 7 நான்காம் தலைமுறை புராசாஸர் உடையது.
பின்புறம் 50MP முதன்மை கேமராவுடன் சோனி நிறுவனத்தின் IMX896 சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. 8MP வைட் ஆங்கிள் கேமராவும், செல்ஃபி பிரியர்களுக்காக 50MP கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
7000mAh பேட்டரி திறனுடன் வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 80W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
ரியல்மீ பி 4 ஸ்மார்ட்போனில், 6.77 அங்குல அமோலிட் திரை கொடுக்கப்பட்டுள்ளது. திரை சுமுகமாக இருப்பதற்கு 144Hz திறன் வழங்கப்பட்டுள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி புராசஸர் கொண்டது.
பின்புறம் 50MP முதன்மை கேமராவும், 8MP அல்ட்ரா வைட் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 16MP செல்ஃபி கேமரா உடையது.
இதையும் படிக்க | ஃபிளிப்கார்ட்டில் ஐபோன் 16 விலை சரிவு! சலுகையுடன் வாங்குவது எப்படி?