கவினின் கிஸ் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள கிஸ் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணிக தோல்வியை படம் சந்திக்கவில்லை.

கவின் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் ‘மாஸ்க்’ எனும் மற்றொரு படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார்.
இதனிடையே, நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள கிஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.
ஜென் மார்டின் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், இசையமைப்பாளர் அனிருத் பாடிய ’திருடி’ பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றிருந்தது.
இந்த நிலையில், கிஸ் திரைப்படம் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: மசோதாவை நிறுத்திவைக்க முடிந்தால் ஆளுநரின் விருப்பப்படி அரசு செயல்படுகிறதா? - உச்சநீதிமன்றம்