Online Gaming Bill: எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் ஆன்லைன் கேமிங் மசோதா! -...
ஏஜிஎஸ் தயாரிப்பில் அர்ஜுனை இயக்கும் அறிமுக இயக்குநர்!
நடிகர் அர்ஜுனின் புதிய படம் குறித்து ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்துக்கான பூஜை தொடங்கப்பட்டதாக ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் நாயகனாகவும் நடிகை அபிராமி நாயகியாகவும் நடிகை ப்ரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.
லவ் டுடே படத்தின் துணை இயக்குநர் சுபாஷ் இந்தப் படத்தினை இயக்குகிறார். இவர் ’கற்றது வீண்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இவரது திறமையை நம்பி ஏஜிஎஸ் நிறுவனம் தங்களது 28-ஆவது படத்தை தயாரிக்கிறது.
இது குறித்து அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
கதைகளுக்கு உயிர்கொடுக்கவும் புதிய திறமைகளை அறிமுகப்படுத்தவும் எங்களுக்குப் பிடிக்கும். உங்களது ஆசிர்வாதத்துடன் எங்களது அடுத்த படமான ஏஜிஎஸ்28-ஐ அறிமுகப்படுத்துகிறோம்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிக்க சுபாஷ் ராஜ் இயக்குகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படத்தினை ஏஜிஎஸ் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
We love bringing stories to life and introducing new talent. With all your blessings we are happy to announce our next production #AGS28 with the “Action King” @akarjunofficial Sir @abhiramiact & @preitymukhundan , directed by @subashraj1197 ♥️ @Ags_production… pic.twitter.com/NRvO2Em1sC
— Archana Kalpathi (@archanakalpathi) August 20, 2025