ஸ்வீடனின் 113 ஆண்டுகள் பழைமையான தேவாலயம் புதிய இடத்திற்கு மாற்றம் - என்ன காரணம் ...
20 வது பிறந்தநாள் கொண்டாடிய பிக் பாஸ் ஜோவிகா!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற, நடிகையும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜோவிகா 20 வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
பதின் பருவத்திலிருந்து 20களில் நுழைவது, புதிய வியப்புகளையும் அச்சங்களையும் ஒருங்கே கொடுப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானவர் ஜோவிகா.
நடிகை வனிதா விஜயகுமாரின் மகளான இவர், மிஸ்டர் & மிஸஸ் என்ற திரைப்படத்தை தயாரித்தார். இதில், வனிதா விஜயகுமார் நாயகியாகவும் நடன இயக்குநர் ராபர்ட் நாயகனாகவும் நடித்திருந்தனர். இப்படத்தை வனிதா விஜயகுமாரே இயக்கியிருந்தார்.
தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஜோவிகா, அதற்கான பயிற்சிகளையும் முறையாக மேற்கொண்டு வருகிறார். இதோடு மட்டுமின்றி சமையல், துப்பாக்கிச்சுடுதல், வில் வித்தையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே, ஜோவிகா தனது 20வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர்,
''புதிய தசாப்தம். பதின் பருவம் முடிந்து, 20களில் நுழைவது ஒருவித அச்சத்தையும் வியப்பையும் தருகிறது. நிறைய அன்புகளுடனும், ஆசிர்வாதங்களுடனும் நம்பிக்கையுடனும் கனவுகளுடனும் எனது வாழ்க்கையின் புதிய சகாப்தத்தில் நுழைகிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | மறுஒளிபரப்பாகும் தொடர்கள் டிஆர்பி பெறுகின்றனவா?