நாய்கள் முக்கியமா? குழந்தைகள் முக்கியமா? ஜி.பி. முத்துவுக்கு நடிகை பதிலடி!
மத்திய துணை ராணுவப் படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எப்) காலியாகவுள்ள கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Constable (General Duty(Sports Quota)-2025)
காலியிடங்கள்: 241
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது பங்கு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.8.2025 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி , ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிகளின் படி சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டுத் திறன், உடற்தகுதி, மருத்துவத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடை பெறும் நாள், இடம் போன்ற விபரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும். 2023 ஆம் ஆண்டிற்கு பிந்தய விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.
உடற்தகுதி: ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரமும், (எஸ்டி பிரிவினர் 162.5 செ.மீ) மேலும் சாதாரண நிலையில் மார்பளவு 80 செ.மீ. அகலமும் விரிவடைந்த நிலையில் 85 செ.மீ. அகலமும் இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தப்பட்சம் 157 செ.மீ. உயரம் (எஸ்டி பிரிவினர் 150 செ.மீ) பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ .147 மட்டும். கட்டணத்தை விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ள செல்லானை பயன்படுத்தி செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி, பெண்கள் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.rectt.bsf.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.