Karan Thapar: ``என்ன குற்றம்னு சொல்லாமலே ஊடகவியலாளர் கரன் தாப்பருக்கு சம்மன்'' -...
யூனியன் வங்கியில் மேலாளர் பணி: காலியிடங்கள் 250
யூனியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 250 மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Wealth Manager
காலியிடங்கள்: 250
சம்பளம்: மாதம் ரூ. 64,820 - 93,960
வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் அரசு விதிகளின்படி சலுகை வழங்கப்படும்.
தகுதி: நிதியியல் பிரிவில் எம்பிஏ, பிஜிடிஎம், பிஜிபிஎம், பிஜிடிபிஏ போன்ற ஏதாவதொரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வெல்த் மேனேஜ்மெண்ட் பிரிவில் குறைந்தது 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, வேலூர், விருதுநகர், நாகர்கோவில் போன்ற இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ,177, இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.1,180, கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.8.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.