செய்திகள் :

கால் லிட்டர்(250 மிலி) பாட்டிலின் விலை ரூ. 125?

post image

இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களின் விலை இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தங்கள் அலுவல் நேரங்களில் 'ஆவா'(Aava) என்ற நிறுவனத்தின் தரம் மிக்க குடிநீர் பாட்டில்களைப் பயன்படுத்துகின்றனர். தேர்தல் ஆணையர்கள் பல்வேறு அலுவலகக் கூட்டங்களில் இந்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

'ஆவா' நிறுவனத்தின் இணையதளத்தில் கால் லிட்டர் (250 மிலி) பாட்டிலின் விலை ரூ. 1,600 (8 பாட்டில்கள்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஒரு 250 மிலி குடிநீர் பாட்டிலின் விலை ரூ. 200. (நாள் ஒன்றுக்கு அலுவலக நேரத்தில் குறைந்தது 2 லிட்டர் குடிநீர் பயன்படுத்தினால் அதன் விலை ரூ. 1,600)

இதுவே தள்ளுபடியில் வாங்கினால் 8 பாட்டில்களின் விலை ரூ. 999. ஒரு 250 மிலி பாட்டிலின் விலை ரூ. 125 ஆகிறது.

மேலும் இந்த பாட்டில் கண்ணாடியால் ஆனது. பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் அல்ல. சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று நிறுவன இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதாரண மக்கள் ரூ. 10, 20-க்கு குடிநீர் பாட்டில்கள் வாங்கும் நிலையில், தேர்தல் ஆணையர்கள் நாள் ஒன்றுக்கு குடிக்கும் தண்ணீரின் விலை மட்டுமே ஆயிரக்கணக்கில் இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பேசி வருகின்றனர்.

Price of drinking water bottles used by Election Commissioners in the Election Commission of India

கேள்வி கேட்டால் தேச துரோகமா..? பத்திரிகையாளர்களுக்கு சம்மன்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

மூத்த பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜனுக்கு அசாம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தி வயர் இணையதளம் முடக்கம்பாகிஸ்தான் பயங்கரவாதி... மேலும் பார்க்க

கேரளத்தில் சிறுமி பலி: மூளையைத் தின்னும் அமீபா உடலுக்குள் எப்படி நுழைகிறது?

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் 9 வயது சிறுமி மரணமடைந்துள்ளார். மேலும் ஒரு 3 மாதக் குழந்தை மற்றும் 40 வயது நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். கேரளத்தில் ... மேலும் பார்க்க

தில்லி முதல்வரை தாக்கியவர் நாய் பிரியரா..? கைதானவரின் பின்னணி என்ன?

தில்லி முதல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்ட விவகாரத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில், புதன்கிழமை காலை நடைபெற்ற மக்களின் குறை... மேலும் பார்க்க

ஆக. 22ல் பிகாரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 22ல் கயாஜி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து பேரணியில் உரையாற்ற உள்ளதாக துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி புதன்கிழமை தெரிவித்தார். பிரதமரின் விழாவிற்கான ஏற்பாடுக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை!

நாடாளுமன்றத்தில் வளாகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் புகைப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீ... மேலும் பார்க்க

தே.ஜ. கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கர் ஜூலை 21-இல் தனது ... மேலும் பார்க்க