Karan Thapar: ``என்ன குற்றம்னு சொல்லாமலே ஊடகவியலாளர் கரன் தாப்பருக்கு சம்மன்'' -...
Asia Cup: 'இந்த அணியை வச்சுகிட்டா நீங்க...'- தேர்வுக்குழுவை விமர்சித்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை நேற்று (ஆகஸ்ட் 19) பிசிசிஐ வெளியிட்டிருந்தது.

அதன்படி சூர்யகுமார் யாதவ் (கேப்டன்) ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் ஆசியக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கின்றனர்.
இந்த அணியில் ஸ்ரேயஸ் ஐயர், சாய் சுதர்ஷன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் இந்திய அணியின் தேர்வு குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்திருக்கிறார்.
"அடுத்த ஆறு மாதங்களில் டி20 உலகக்கோப்பை வரவிருக்கிறது. அதற்கான தயாரிப்பா இது? இந்த அணியை வைத்துக்கொண்டா உலகக்கோப்பைக்குச் செல்லப் போகிறீர்களா? தேர்வாளர்கள் முன்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

தற்போதைய ஃபார்ம் வைத்து பார்த்தால் ஸ்ரேயஸ் கண்டிப்பாக அணியில் இருந்திருக்க வேண்டும். கடந்த IPL-ல் 600 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஸ்ரேயஸுக்கு அணியில் இடமில்லை என அஜித் அகர்கர் கூறுவது அபத்தமாக உள்ளது" என்று தேர்வுகுழுவை விமர்சித்து பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...