மம்மூட்டிக்கு என்ன ஆனது? மோகன்லால் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ஆசிய கோப்பை: IPL-ல் ஆரஞ்சு, ஊதா தொப்பிகளை வென்ற டைட்டன்களுக்கு இடமில்லையா?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) கடந்த செவ்வாய் அன்று (ஆகஸ்ட் 19) ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை அறிமுகப்படுத்தியது.
15 பேர் கொண்ட அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது. கில், பும்ரா, குல்தீப் யாதவ் என டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் கம்பேக் கொடுத்திருந்தனர். எனினும் அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்காமல் போனது.

ஆசிய கோப்பை அணியில் இடம் பெறுவாரா என்ற கேள்வியில் இருந்த கில், துணைக் கேப்டனாக அறிவிக்கப்படு அசத்தியுள்ளார்.
எனினும் அவரது கேப்டன்சியின் கீழ் குஜராத் டைடன்ஸ் அணியில் சிறப்பாக விளையாடி ஐபிஎல்-ல் ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பிகளைக் கைப்பற்றிய பிரசித் கிருஷ்ணா மற்றும் சாய் சுதர்சன் அணியில் அறிவிக்கப்படாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
சாய் சுதர்சன் மற்றும் பிரசித் கிருஷ்ணா கண்ட அளவிலான மிகப் பெரிய தொடரான ஆசிய கோப்பைக்கான அணியில் இடம்பெறும் போட்டியில் இருந்தபோதும் உரிய இடத்தை தவறவிட்டுள்ளனர்.

கடந்த ஐபிஎல் சீசனில், 15 போட்டிகளில் களமிறங்கிய அவர், 759 ரன்கள் சேர்த்தார்.
Asia Cup: ஆசிய கோப்பையில் புறக்கணிக்கப்பட்ட ஸ்ரேயஸ்; BCCI தேர்வுக் குழு தலைவர் கூறும் காரணம் என்ன?
இதேப்போல பிரசித் கிருஷ்ணா 15 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சாய், கிருஷ்ணாவைத் தவிர ஐபிஎல்லில் 500-க்கும் மேல் ரன் குவித்த ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரும்,
15 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய சாய் கிஷோர், புவனேஷ்வர் குமார், க்ருனால் பாண்டியா, வைபவ் அரோரா, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல் மற்றும் கலீல் அகமது ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை.
சீனியர்கள், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் என வகைப்படுத்தினாலும், ஐபிஎல் புள்ளி விவரங்கள் எல்லோருக்கும் கைகொடுக்காது என்பதையே அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வர் குழு உணர்த்தியிருக்கிறது.

இந்திய அணி வீரர்களின் பட்டியல்
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
ஷுப்மன் கில் (துணை கேப்டன்)
அபிஷேக் சர்மா
திலக் வர்மா
ஹர்திக் பாண்டியா
ஷிவம் துபே
அக்சர் படேல்
ஜிதேஷ் சர்மா
ஜஸ்பிரித் பும்ரா
அர்ஷ்தீப் சிங்
வருண் சக்ரவர்த்தி
குல்தீப் யாதவ்
சஞ்சு சாம்சன்
ஹர்ஷித் ராணா
ரிங்கு சிங்