செய்திகள் :

RCB: "இதே வேகத்தில் போனால் ஆர்.சி.பி அதைச் செய்ய 72 ஆண்டுகள் ஆகும்" - கிண்டலடிக்கும் அம்பத்தி ராயுடு

post image

ஐபிஎல்-லில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் அணி ஆர்.சி.பி. ஆனாலும், ஐ.பி.எல் முதல் சீசனிலிருந்து தொடர்ச்சியாக 17 சீசன்களாக மூன்று முறை இறுதிப் போட்டி வரை சென்றும் அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

இப்படியிருக்க, கடந்த சீசனில் ரஜத் பட்டிதார் தலைமையில், `நிச்சயம் கோப்பையை வெல்வோம்' என்ற பெரும் நம்பிக்கையுடன் களமிறங்கியது பெங்களூரு அணி.

RCB Victory
RCB Victory

அதற்கேற்றாற்போல, அவர்களைப் போலவே 17 சீசன்களாக முதல் கோப்பைக்காகப் போராடிக்கொண்டிருந்த பஞ்சாப் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி, ஐ.பி.எல் கோப்பையை முதல்முறையாகக் கையிலேந்தியது.

இந்த நிலையில், மும்பை, சென்னை ஆகிய அணிகளின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு, பெங்களூரு அணி இன்னும் நான்கு கோப்பைகளை வெல்ல 72 வருடம் ஆகும் என்று கிண்டலடித்திருக்கிறார்.

சுபாங்கர் மிஸ்ராவுடன் அன்ஃபில்டர்டு (Unfiltered) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அம்பத்தி ராயுடு, "ஆர்.சி.பி சாம்பியன் பட்டம் வென்றபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எங்கள் பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்தனர்.

ஆர்.சி.பி ரசிகர்கள் நாடு முழுவதும் பரவியிருக்கின்றனர். ஆனால், இதேபோல 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆர்.சி.பி சாம்பியன் பட்டம் வெல்லுமானால், மொத்தமாக 5 கோப்பைகளை வெல்ல 72 ஆண்டுகள் ஆகும்.

அம்பத்தி ராயுடு
அம்பத்தி ராயுடு

அவர்கள் தங்களின் வேகத்தைக் கொஞ்சம் அதிகரிக்க வேண்டும். ஆர்.சி.பி சரியான பாதையில் செல்கிறது என்று நினைக்கிறேன். அவர்கள் விளையாடும் விதத்தை நான் மிகவும் ரசிக்கிறேன்" என்று கூறினார்.

18 வருட ஐ.பி.எல் வரலாற்றில் அதிகபட்சமாக மும்பை மற்றும் சென்னை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Asia Cup: ஆசிய கோப்பையில் புறக்கணிக்கப்பட்ட ஸ்ரேயஸ்; BCCI தேர்வுக் குழு தலைவர் கூறும் காரணம் என்ன?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர் ஃபார்மட்) வரும் செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கவிருக்கிறது.இந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இத்தொடருக்கான இந... மேலும் பார்க்க

Asia Cup: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்; வெளியான வீரர்களின் பட்டியல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதே... மேலும் பார்க்க

`ஒருநாள் போட்டிகளில் அவருக்கு மாற்று எவரும் இல்லை' - அம்பத்தி ராயுடு

2027 உலகக்கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான திட்டத்தில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டன... மேலும் பார்க்க

டெவால்ட் பிரெவிஸ் விவகாரத்தில் நடந்தது என்ன? - அடுத்தடுத்து விளக்கம் கொடுத்த சிஎஸ்கே & அஸ்வின்

ஐபிஎல் 2025 சீசனின் பாதியில், காயம் காரணமாக விலகிய குர்ஜப்நீத் சிங்கிற்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தென்னாப்பிரிக்க இளம் வீரர் `பேபி ஏபி' என்ற ரசிகர்களால் அழைக்கப்படும் டெவால்ட் பிரெவிஸை மாற்ற... மேலும் பார்க்க

Asia Cup: 'ஆசியக்கோப்பையில் இந்தியா விளையாடக்கூடாது'- கேதர் ஜாதவ் சொல்வது என்ன?

ஆசியக் கோப்பையில் இந்தியா VS பாகிஸ்தான் மோதல் குறித்து முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐ... மேலும் பார்க்க

மூன்றே போட்டிகளில் கோலியின் சாதனையை முறியடித்த `பேபி ஏபி' பிரேவிஸ்; எப்படி சாத்தியமானது?

பேபி ஏபி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் டெவால்ட் பிரேவிஸ், டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கெதிரான கோலியின் சாதனையை வெறும் மூன்றே போட்டிகளில் முறியடித்திருக்கிறார்.தென்னாப்பிரிக்க கிரிக்க... மேலும் பார்க்க