இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை
உள்ளிகோட்டை துணை மின்நிலையத்திற்கு உள்பட்ட குடிகாடு உயா்அழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஆக. 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி தெரிவித்துள்ளாா்.
உள்ளிக்கோட்டை தெற்குதெரு, குப்பன்குடிகாடு, தெற்குசீதாரம், அண்ணாநகா், கூப்பாச்சிக்கோட்டை, பரவாக்கோட்டை, குடிகாடு மற்றும் இப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்கள்.








