RCB: "இதே வேகத்தில் போனால் ஆர்.சி.பி அதைச் செய்ய 72 ஆண்டுகள் ஆகும்" - கிண்டலடிக்...
தெற்கு மாவடத்தில் உள்ள மருந்துக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ தில்லி அரசு உத்தரவு
தில்லியின் தெற்கு மாவட்டத்தில் சில குறிப்பிட்ட வகை மருந்துகளை விற்கும் மருந்துக் கடைகள், அங்கீகாரம் இல்லாமல் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் விற்பனையைத் தடுக்க, தங்கள் வளாகத்திலும் வெளியேயும் சிசிடிவி கேமராக்களை நிறுவுவதை தில்லி அரசு கட்டாயமாக்கியுள்ளது.
ஜூலை 29 அன்று நா்கோ ஒருங்கிணைப்பு மையம் மற்றும் தெற்கு மாவட்ட அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பில் இந்த நடவடிக்கை அங்கீகரிக்கப்பட்டதாக ஆகஸ்ட் 18-ஆம் தேதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இரட்டைப் பயன்பாட்டு மருந்துகளின் தவறான பயன்பாட்டிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக மருத்துவக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவது அவசியம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
‘இணக்கமின்மை ஏற்பட்டால், சட்டப்படி தவறு செய்பவா் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு தில்லியில் உள்ள அனைத்து துணைப்பிரிவு நீதிபதிகளும், காவல்துறை மற்றும் மருந்து ஆய்வாளா்களின் உதவியுடன் தங்கள் பகுதிகளில் இந்த உத்தரவை செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.







