RCB: "இதே வேகத்தில் போனால் ஆர்.சி.பி அதைச் செய்ய 72 ஆண்டுகள் ஆகும்" - கிண்டலடிக்...
ரயிலில் இருந்து தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு
கொரடாச்சேரி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.
கூத்தாநல்லூரை அடுத்த மணக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் செய்யது முகமது (65). இவா், காரைக்கால் - திருச்சி ரயிலில் செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தாா்.
கொரடாச்சேரி ரயில் நிலையம் அருகே ரயில் படிக்கட்டு அருகே இறங்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தாா். அப்போது தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த செய்யது முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.









