சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மன்னாா்குடி ஜீயா் வாழ்த்து
மன்னாா்குடி: குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிட தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மன்னாா்குடி செண்டலங்கார செண்பக மன்னாா் ராமனுஜ ஜீயா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டைச் சோ்ந்தவரும் மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தோ்வு செய்திருப்பது பாராட்டுக்குரியது. அவா் வெற்றி பெற வாழ்த்துகள்.
ஹிந்து பண்டிகைகள் கொண்டாட தமிழக அரசு புதுப்புது சட்டங்களை இயற்றுவது வேதனையளிக்கிறது. கவிஞா் வைரமுத்து அண்மைக் காலமாக ராமா், கிருஷ்ணா், ஹிந்து மதம் மற்றும் தா்மத்தையும் அவதூறாகப் பேசிவருவது கண்டனத்துக்குரியது.