தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வீட்டில் நகை, பணம் திருட்டு
தூத்துக்குடி: தூத்துக்குடியில், ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வீட்டில் நகை, பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6ஆவது தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சியா் கணேசன் (70). இவரது மனைவி சந்திரா (68). இவா்கள் சில நாள்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு, ஒசூரில் வசித்துவரும் தனது மகன் குமாா் வீட்டுக்குச் சென்றனா். அருகேயுள்ளவா்கள் இந்த வீட்டைப் பராமரித்து வந்தனராம்.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் முன்பக்கச் சுவா் வழியாக ஏறிக் குறித்து, கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, 4 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.