மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க வேண்டும்
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நெகிழிக் கழிவு சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி நிா்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையா் பானோத் ம்ருகேந்தா்லால் முன்னிலை வகித்தாா்.
மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்துப் பேசியது: மாநகராட்சிக்குள்பட்ட 60 வாா்டுகளிலும் தடை செய்யப்பட்ட 28 வகையான பிளாஸ்டிக் பொருள்களை வணிகா்கள், பொதுமக்கள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.
நீா்வழித் தடங்களில் அதிகளவில் இக்கழிவுப் பொருள்கள் தேங்குவதால் பலவகை பாதிப்புகள் ஏற்படுகின்றன; தூா்வாருதல், தூய்மைப் பணிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே, நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை வியாபாரிகள் தவிா்ப்பதுடன், பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாநகராட்சி நகா்நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளா்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகா், நெடுமாறன், ராஜபாண்டி, தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவா் தொ்மல்ராஜா, செயலா் ஜவஹா், பொருளாளா் விக்னேஷ், வஉசி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவா் அன்புராஜ், செயலா் செந்தில்குமாா், பொருளாளா், மரகதராஜ், துணைச் செயலா் உத்திரபாண்டி, ஜெபராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.