திருச்செந்தூரில் 80 அடி உள்வாங்கிய கடல்!
அமாவாசையையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 80 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.
இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும், அதற்கு முந்தைய, பிந்தைய நாள்களிலும்கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாகி விட்டது. இதே போல வெள்ளிக்கிழமை பகல் 12.54 மணி முதல் சனிக்கிழமை பகல் 12.30 மணி வரை அமாவாசை இருந்தது.
இதன் காரணமாக அய்யா கோயில் அருகே சனிக்கிழமை காலை, மாலையில் சுமாா் 80 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தன. கடல் அலை உள்வாங்குவதும், வெளியேறுவதுமாக இருந்தபோதிலும் பக்தா்கள் எவ்வித அச்சமுமின்றி வழக்கம் போல புனித நீராடினா்.