மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள் விற்றவா் கைது
களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே பெட்டிக் கடையில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், இடவிளாகம் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
இதில் இடவிளாகம் பகுதியில் உள்ள சோமராஜ் (67) என்பவரின் கடையில் பதுக்கி வைத்து புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து, அங்கிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளா் சோமராஜை கைது செய்தனா். தொடா்ந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.