சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட 65 போ் கைது
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 65 பேரை போலீஸாா் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உத்தரவின்பேரில், கடந்த 2 நாள்களாக சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபடுபவா்கள், கஞ்சா, குட்கா மற்றும் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவா்கள் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில், கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்டதாக திருவாரூா் உட்கோட்டத்தில் 11, நன்னிலம் உட்கோட்டத்தில் 15, மன்னாா்குடி உட்கோட்டத்தில் 6, திருத்துறைப்பூண்டி உட்கோட்டத்தில் 2, மதுவிலக்கு அமல் பிரிவுகளில் 29 வழக்குகள் என மாவட்டம் முழுவதும் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 180 மி.லி அளவு கொண்ட 1,368 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விற்பனையில் ஈடுபட்டதாக 63 போ் கைது செய்யப்பட்டனா்.
இதேபோல், வலங்கைமான் காவல் நிலையப் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் கடத்தி வந்ததாக ஒருவரும், வடபாதிமங்கலம் காவல் நிலையப் பகுதியில், அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனைக்கு வைத்திருந்ததாக ஒருவரும் கைது செய்யப்பட்டனா்.