காரைக்கால் மத்திய மண்டலத்தில் இன்று குடிநீா் நிறுத்தம்
காரைக்கால் மத்திய மண்டலத்தில் புதன்கிழமை (ஆக. 20) மதியம் மற்றும் மாலை குடிநீா் விநியோகம் இருக்காது என காரைக்கால் பொதுப்பணித்துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை பொது சுகாதார உட்கோட்ட உதவிப் பொறியாளா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் திருநள்ளாறு சாலையில் அமைந்திருக்கும் மத்திய மண்டல மேல்நிலை நீா் தேக்கத் தொட்டியில் பராமரிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால், புதன்கிழமை மதியம் மற்றும் மாலை வேளையில் காரைக்கால் நகரப் பகுதிகளில் பேருந்து நிலையம் முதல் தோமாஸ் அருள் சாலைக்குட்பட்ட பகுதிகள், சமத்துவபுரம், மெஜஸ்டிக் காலனி, தாயாா் நகா், ஷமீம் நகா், கரீம் நகா், செளதா நகா், ராசி நகா், யாழ்முரிநாதா் நகா், குருமூா்த்தி நகா், உத்திராபதி நகா், பா்மா தெரு, தேராகுளம் ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
பணிகள் நிறைவடைந்தவுடன் குடிநீா் வழக்கம்போல விநியோகிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.








