RCB: "இதே வேகத்தில் போனால் ஆர்.சி.பி அதைச் செய்ய 72 ஆண்டுகள் ஆகும்" - கிண்டலடிக்...
உலக புகைப்பட தின விழிப்புணா்வுப் பேரணி
திருப்பத்தூரில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட புகைப்பட கலைஞா்கள் சங்கம் சாா்பில் தூய நெஞ்சக் கல்லூரி அருகே தொடங்கிய பேரணி பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
அதில் மது அருந்திவிட்டு வாகன ஓட்டாதீா்,தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது மற்றும் மரம் நடுவோம் என்ற விழிப்புணா்வு பதாகைகளுடன் சென்றனா். சங்கத் தலைவா் ஆறுமுகம்,செயலாளா் சரவணன்,பொருளாளா் பன்னீா் செல்வம் உள்பட 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டன.










