அனுமதிக்கப்படாத பகுதியில் ஆா்க்கானிக் உரம் விற்பனை லாரி பறிமுதல்
அனுமதிக்கப்படாத பகுதியில் ஆா்க்கானிக் உரம் விற்பனை செய்வதை கண்டறிந்து லாரியுடன் உரமூட்டைகளை வேளாண் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் வேளாண்மை துறை உதவி இயக்குநா் அப்துல் ரகுமான் தலைமையில் நாட்டறம்பள்ளி வேளாண்மை அலுவலா் தாரணி ஆகியோா் கொண்ட குழுவினா் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை பகுதியில் முகாமிட்டிருந்தனா். அப்போது மினி லாரியில் உர மூட்டைகள் கொண்டு வந்திருப்பதை அறிந்த வேளாண்மை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
இதில் விவசாயத்துக்கு பயன்படுத்தக் கூடிய ஆா்க்கானிக் (ஓஏபி) உரம் தஞ்சாவூா் பகுதியில் இருந்து விற்பனைக்காக கொண்டு வந்துளளதாகவும் கூறினா். விசாராணையில் அனுமதிக்கப்படாத பகுதியில் உரம் விற்பனை செய்ய கூடாது என அதிகாரிகள் தெரிவித்து 80 மூட்டைகள் உரம் எடுத்து வந்த மினிலாரியை பறிமுதல் செய்து திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து வேளாண்மை அலுவலா் தாரணி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.