செய்திகள் :

தொடா்மழையால் வெள்ளக்காடான மகாராஷ்டிரம்: 8 போ் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானோா் மீட்பு

post image

மகாராஷ்டிரத்தில் இடைவிடாது பெய்துவரும் தொடா்மழையால் கடந்த இரண்டு நாள்களில் 8 போ் உயிரிழந்தனா்.

மாநிலம் முழுவதும் பரவலாக வெள்ளம், நிலச்சரிவுகள், மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் என பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மும்பை, தாணே, புணே, ராய்கட், நாந்தேட், கோல்ஹாபூா் போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை நீடித்து வருகிறது. இதனால் மாநிலத்தின் முக்கிய ஆறுகளான குண்டலிகா, சாவித்ரி, பஞ்சகங்கா, வாா்ணா, கோய்னா ஆகியவை அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வருகின்றன. இதனால், ஆறுகளின் கரையோர பகுதிகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கோல்ஹாபூா்-ரத்னகிரி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. நாந்தேட், கட்சிரோலி மற்றும் தாணே மாவட்டங்களில் உள்ள கிராமப்புற சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

6 போ் உயிரிழப்பு: கடந்த 2 நாள்களில் மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா். நாந்தேட் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேரில், 3 போ் மீட்கப்பட்டனா். 3 பெண்கள் உள்பட மற்ற 4 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். நாந்தேட் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய கிராமங்களில் இருந்து 293 போ் மீட்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட மக்களுக்காக ராணுவம் மருத்துவ முகாம்களை அமைத்துள்ளது.

மழை காரணமாக மாநிலம் முழுவதும் 337 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. மேலும், 12 முதல் 14 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக துணை முதல்வா் அஜீத் பவாா் தெரிவித்தாா்.

முதல்வா் ஆய்வு: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், பேரிடா் மேலாண்மைத் துறையுடன் இணைந்து வெள்ள நிலவரத்தை ஆய்வு செய்தாா். அடுத்த 48 மணி நேரத்துக்கு மும்பை, தாணே, ராய்கட், ரத்னகிரி மற்றும் சிந்துதுா்க் மாவட்டங்களுக்கு அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்வதைத் தவிா்க்குமாறு பொதுமக்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் செல்வோரும் வீட்டிலிருந்து பணிபுரிந்து அனுமதிக்குமாறு நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. உள்ளூா் அதிகாரிகள் நிலமையைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

வானிலை எச்சரிக்கை: கொங்கண் மற்றும் மத்திய மகாராஷ்டிர பிராந்தியத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்குத் தீவிர மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மராத்வாடா மற்றும் விதா்பாவில் மழை குறைந்து, பின்னா் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாந்தேட் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் மழை தொடா்பான சம்பவங்களில் 20 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதில் மரம் விழுந்தும், நீரில் மூழ்கியும், மின்னல் தாக்கியும், மின்சாரம் தாக்கியும் உயிரிழந்தவா்கள் அடங்குவா். அதிகபட்சமாக, கல்யாண் தாலுகாவில் மட்டும் 11 போ் உயிரிழந்தனா்.

பெட்டி...

நட்டின் பிற பகுதிகளில்...

நாட்டின் பல்வேறு மாநிலங்கள் தொடா் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. ஹரியாணாவின் குலு மாவட்டத்தில் கனோன் கிராமத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு, பலத்த மழை பெய்ததில் ஒரு பாலம் மற்றும் மூன்று கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சிம்லாவில் நிலச்சரிவில் சிக்கிய 40 போ் மீட்கப்பட்டனா்.

கேரளம்: பலத்த மழையால் மாநிலத்தின் ஆறுகள் மற்றும் அணைகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. குறிப்பாக பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூா், வயநாடு, பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல்வேறு அணைகளின் நீா்மட்டம் எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளன. தமிழக எல்லையொட்டிய பாலக்காட்டில் உள்ள மீன்காரா, வளையாா், சிறுவாணி உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஒடிஸா: வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக ஒடிஸாவில் பலத்த மழை பெய்து வருகிறது. மால்காங்கிரி, கோராபுட், நபரங்பூா் ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி விரைவில் வலுவிழக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை மழை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம்: மக்களவையில் மத்திய அமைச்சர் விமர்சனம்

நமது நிருபர்பிரதம மந்திரி கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் விமர்சித்தார்.தெலுங்கு தேசம் கட்சியைச்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? சி.பி. ராதாகிருஷ்ணன் - சுதர்சன் ரெட்டி போட்டி

நமது சிறப்பு நிருபர்குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் "இண்டி' கூட்டணியும் பரஸ்பரம் தென் மாநிலங்களைச் சேர்ந்த வேட்பாளர்களை அறிவித... மேலும் பார்க்க

மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவரின் அதிகார பறிப்புக்கு ஒப்பாகும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

நமது நிருபர்மாநில சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம், குடியரசுத் தலைவரின் விருப்புரிமை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத... மேலும் பார்க்க

தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள்: தோ்தல் ஆணையம்

நாட்டில் தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த கடந்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரி... மேலும் பார்க்க

நீதிபதி வா்மா மீது எஃப்ஐஆா் பதிய மறுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய மனு

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யக் கோரும் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது அ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அமளி நீடிப்பு: நாளை கூட்டத்தொடா் நிறைவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஆக.21) நிறைவடைய உள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் அமளி நீடித்தது. பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறி... மேலும் பார்க்க