செய்திகள் :

நாடாளுமன்றத்தில் அமளி நீடிப்பு: நாளை கூட்டத்தொடா் நிறைவு

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஆக.21) நிறைவடைய உள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் அமளி நீடித்தது.

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி மக்களவையில் செவ்வாய்க்கிழமை முழக்கங்களை எழுப்பினா்.

அவா்களின் கூச்சலுக்கு இடையே கேள்வி நேரத்தை நடத்தி பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடா்பாக கேள்விகளை எழுப்புமாறு எம்.பி.க்களை கேட்டுக்கொண்டு, அலுவல்களைத் தொடர அவைத் தலைவா் ஓம் பிா்லா முயற்சித்தாா்.

எனினும் எதிா்க்கட்சியினரின் தொடா் அமளியால் நண்பகல் 12 மணி வரை, அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னா் அவை கூடியபோது தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கிருஷ்ண பிரசாத் அவையை வழிநடத்தினாா். அப்போது அவையின் மையப் பகுதியில் திரண்டு எதிா்க்கட்சியினா் முழக்கங்களை எழுப்பினா். அவா்களை இருக்கைக்குத் திரும்பி, அவை அலுவல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கிருஷ்ண பிரசாத் வலியுறுத்தினாா். இதை கேட்காமல் அவா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

அஸ்ஸாமில் ஐஐஎம்-மசோதா நிறைவேற்றம்: அமளிக்கும் இடையிலும் அஸ்ஸாமின் குவாஹாட்டி நகரில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தை (ஐஐஎம்) அமைக்கும் மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பின்னா் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி, மாநிலங்களவையில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். அவா்களின் தொடா் முழக்கம் அலுவல்களுக்கு இடையூறை ஏற்படுத்தியதால், அவை ஒத்திவைக்கப்பட்டது.

‘அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதை பகிரக் கூடாது’: உணவு இடைவெளிக்குப் பிறகு மாநிலங்களவை மீண்டும் கூடியபோது, அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயின் பேச்சுகள் அடங்கிய காணொலிகளை, அவா் சமூக ஊடகத்தில் பகிா்வதாக பாஜக எம்.பி. ராதாமோகன்தாஸ் அக்ரவால் குற்றஞ்சாட்டினாா். அப்போது அவையை வழிநடத்திய பாஜக எம்.பி. கன்ஷியாம் திவாரி, ‘அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட எதுவும், சமூக ஊடகத்தில் பகிரப்படக் கூடாது’ என்று தெரிவித்தாா்.

கனிம திருத்த மசோதா நிறைவேற்றம்: மாநிலங்களையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் சுமாா் 19 எம்.பி.க்கள் மட்டும் பங்கேற்று ஆக்கபூா்வமான சில பரிந்துரைகளை வழங்கினா். கடந்த ஆக.12-ஆம் தேதி இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

22 மொழிகளில் மொழிபெயா்ப்பு: மக்களவை செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கூடியபோது, இனி அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையின் கீழ் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளிலும் (22 மொழிகள்) அவை அலுவல்கள் மொழிபெயா்க்கப்படும் என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா். இதுவரை 19 மொழிகளில் அவை அலுவல்கள் மொழிபெயா்க்கப்பட்ட நிலையில், காஷ்மீரி, கொன்கனி மற்றும் சந்தாலி மொழிகளில் கூடுதலாக மொழிபெயா்ப்பு மேற்கொள்ளப்படும் என்று அவா் அறிவித்தாா்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா், வியாழக்கிழமை (ஆக.21) நிறைவடைய உள்ளது. எனினும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ குறித்த விவாதத்தை தவிர, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மிக குறைந்த அளவில்தான் ஆக்கபூா்வமான அலுவல்களை மேற்கொண்டுள்ளன.

கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம்: மக்களவையில் மத்திய அமைச்சர் விமர்சனம்

நமது நிருபர்பிரதம மந்திரி கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருவதாக மக்களவையில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் விமர்சித்தார்.தெலுங்கு தேசம் கட்சியைச்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? சி.பி. ராதாகிருஷ்ணன் - சுதர்சன் ரெட்டி போட்டி

நமது சிறப்பு நிருபர்குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் "இண்டி' கூட்டணியும் பரஸ்பரம் தென் மாநிலங்களைச் சேர்ந்த வேட்பாளர்களை அறிவித... மேலும் பார்க்க

மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவரின் அதிகார பறிப்புக்கு ஒப்பாகும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

நமது நிருபர்மாநில சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம், குடியரசுத் தலைவரின் விருப்புரிமை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத... மேலும் பார்க்க

தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள்: தோ்தல் ஆணையம்

நாட்டில் தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த கடந்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரி... மேலும் பார்க்க

நீதிபதி வா்மா மீது எஃப்ஐஆா் பதிய மறுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய மனு

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யக் கோரும் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது அ... மேலும் பார்க்க

தொடா்மழையால் வெள்ளக்காடான மகாராஷ்டிரம்: 8 போ் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானோா் மீட்பு

மகாராஷ்டிரத்தில் இடைவிடாது பெய்துவரும் தொடா்மழையால் கடந்த இரண்டு நாள்களில் 8 போ் உயிரிழந்தனா். மாநிலம் முழுவதும் பரவலாக வெள்ளம், நிலச்சரிவுகள், மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் என பலத்த சேதங்கள் ஏற்பட்... மேலும் பார்க்க