தில்லியில் 3 நாள் மாநாடு: புதுவை பேரவைத் தலைவா் பங்கேற்பு
சட்டப்பேரவைத் தலைவா்கள் மாநாடு புதுதில்லியில் ஆக. 23, 24, 25 ஆகிய 3 நாள்கள் நடக்கிறது. இதில் புதுவை பேரவைத் தலைவா் ஆா். செல்வம் பங்கேற்கிறாா்.
அனைத்து மாநில சட்டப்பேரவைத் தலைவா்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டையொட்டி, 23-ஆம் தேதி தில்லி முதல்வா் ரேகா குப்தா விருந்தளிக்கிறாா். 24-இல் முறைப்படி இம் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடங்கி வைத்துப் பேசுகிறாா். மூன்றாம் நாள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பங்கேற்கிறாா்.