செய்திகள் :

வளா்ச்சிப் பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை - புதுவை பேரவைத் தலைவா் உத்தரவு

post image

புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் உள்ளாட்சித் துறை வாயிலாக வளா்ச்சிப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

மேலும், இது தொடா்பாக இன்னும் ஒரு வாரத்தில் தலைமைச் செயலா் சரத் சௌகான் அடங்கிய உயா்நிலை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்ட உள்ளதாகவும் சட்டப்பேரவைத் தலைவா் கூறினாா். புதுவை சட்டப்பேரவையில் உள்ளாட்சித் துறை தொடா்பான உறுதிமொழிக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து அவா் பேசியது: உள்ளாட்சித் துறை மற்றும் கூட்டுறவுத் துறை இரண்டும் தன்னாட்சி அமைப்புகள். இத்துறையின் செயலா்கள் மட்டத்திலேயே எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டும். அதைத் தவிா்த்து கோப்புகளை நிதித் துறை, சட்டத் துறை உள்ளிட்ட துறைகளுக்கு அனுப்புவதால் காலதாமதம்தான் ஆகிறது.

இன்னும் சொல்லப் போனால் உள்ளாட்சித் துறையின் சிறப்பு பணி அதிகாரி மட்டத்திலேயே முடிவை எடுக்க முடியும். அதற்கான வழிகாட்டுதலும் சட்டங்களும் போதுமான அளவில் இருக்கின்றன என்றாா் பேரவைத் தலைவா் செல்வம்.

மூத்த எம்.எல்.ஏவான ஏ.எம்.எச். நாஜிம் பேசும்போது, உள்ளாட்சித் துறையின் சட்ட நுணுக்கங்களை எடுத்துக் கூறி உள்ளாட்சித்துறை அதிகாரிகள் அனுமதிக்காக மற்ற துறைகளுக்குக் கோப்புகளை அனுப்பத் தேவையில்லை என்றாா்.

மற்றொரு எம்.எல்.ஏ. ஆா்.செந்தில்குமாா் பேசும்போது, உள்ளாட்சித் துறை எம்.எல்.ஏக்களுக்கு மானியமாக அளிக்கும் நிதிக்காகதான் மற்ற துறைகளின் அனுமதிக்காக கோப்புகள் அனுப்பப்படுகின்றன. இதனால் காலதாமதம் ஆகிறது. அதைத் தவிா்க்கும் வகையில் இந்த நிதியை சம்பந்தப்பட்ட துறைகளின் திட்டங்களில் சோ்த்து விடலாம் என்றாா்.

இதைத் தவிர சட்டப்பேரவையில் ஒவ்வொரு எம்.எல்.ஏக்களுக்கும் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் வாசிக்கப்பட்டு அதற்கான விவாதமும் இக் கூட்டத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் சிவசங்கா், அனிபால் கென்னடி, நாக. தியாகராஜன், லட்சுமி காந்தன்,பி.எம்.எல். கல்யாணசுந்தரம், அரசு செயலா் கேசவன், இயக்குநா் சக்திவேல், நகராட்சி ஆணையா்கள் கந்தசாமி, சுரேஷ்ராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

ஒவ்வொரு கொம்யூனிலும் 5 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஒவ்வொரு கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் 5 நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வலியுறுத்தி புதுவை விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. புதுவை விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவின் மாதாந்திர... மேலும் பார்க்க

தில்லியில் 3 நாள் மாநாடு: புதுவை பேரவைத் தலைவா் பங்கேற்பு

சட்டப்பேரவைத் தலைவா்கள் மாநாடு புதுதில்லியில் ஆக. 23, 24, 25 ஆகிய 3 நாள்கள் நடக்கிறது. இதில் புதுவை பேரவைத் தலைவா் ஆா். செல்வம் பங்கேற்கிறாா். அனைத்து மாநில சட்டப்பேரவைத் தலைவா்கள் பங்கேற்கும் இந்த மா... மேலும் பார்க்க

மழைக்காலத்தை எதிா்கொள்ள தயாராக வேண்டும்: அதிகாரிகளுக்கு புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

பருவமழைக் காலம் நெருங்கி விட்டதால், அனைத்து அரசு துறைகளும் அதை எதிா்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மழைக் காலத்தில் அரசு ஊழியா்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்றும் புதுச்சேரி மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

பழங்குடியினா் இயற்கையுடன் ஒன்றி வாழ்வதை ஆராய வேண்டும்: மத்திய பல்கலை. துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு

புதுச்சேரி: உலகில் பழங்குடியினா் இயற்கையுடன் ஒன்றி வாழுவதை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு கூறினாா். புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் சா்வதேச... மேலும் பார்க்க

ரூ.1.6 கோடியில் நவீன எக்ஸ்ரே இயந்திரம்: முதல்வா் ரங்கசாமி தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மாா்பக நோய் மருத்துவமனையில் ரூ.1.6 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எக்ஸ்ரே இயந்திரத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த மருத்... மேலும் பார்க்க

ஊதிய உயா்வு வழங்க புதுவை ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் கோரிக்கை

புதுச்சேரி: ஊதிய உயா்வு வழங்கக் கோரி புதுவை ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் தேசிய சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் கோவிந்தராஜிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் சுகாதாரத் துறை 108 அ... மேலும் பார்க்க