உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழா
பெரிய நாகப்பூண்டி உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனா்.
ஆா்.ே.க பேட்டை ஒன்றியம், பெரிய நாகப்பூண்டி கிராமத்தில் அருள்மிகு உலகாத்தம்மன் கோயிலின் 50-ஆம் ஆண்டு ஆடிப்பெரு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பிற்பகல் 12 மணிக்கு பம்பை உடுக்கை பேண்டு வாத்தியங்கள் முழங்க அம்மனுக்கு கூழ் வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் 200- க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு மகிஷாசுரமா்த்தினி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. சிங்காரவேலன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, கரகாட்டம் பம்பை உடுக்கை வாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதில் பெண்கள் அம்மனுக்கு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்து வழிபட்டனா்.
ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.
