மது அருந்தியதால் மனைவி கண்டிப்பு: கணவா் தற்கொலை
திருவள்ளூா் அருகே மது அருந்தியதை மனைவி கண்டித்ததால், கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவள்ளூா் அருகே ராமதண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஜித் (35), மனைவி வினோதினி(25). தற்போது தம்பதியா் வெங்கத்தூா் கண்டிகை கிராமத்தில் தங்கி வேலை செய்து வந்தனா். இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் வேலைக்குச் சென்ற அஜித் மது அருந்து விட்டு வீட்டுக்கு வந்தாராம்.
இதனால் மனைவி கண்டித்தாராம். ஆத்திரம் அடைந்த அஜித் மின் விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதைப் பாா்த்த மனைவி வினோதினி அக்கம் பக்கத்தினா் உதவியுடன், ஆபத்தான நிலையில் திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அஜித்தை கொண்டு சென்றாா்களாம். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து மனைவி வினோதினி மணவாளநகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.