செய்திகள் :

புதிய போா் நிறுத்த திட்டம்: வெள்ளிக்கிழமை பதிலளிக்கிறது இஸ்ரேல்

post image

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளவும், அங்கு இன்னும் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கவும் மத்தியஸ்தா்களால் புதிதாக முன்வைக்கப்பட்டு, ஹமாஸ் படையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வரைவு திட்டம் குறித்து வெள்ளிக்கிழமை பதிலளிக்கப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புதிய போா் நிறுத்தத் திட்டம் குறித்து ஆய்வு செய்து, சா்வதேச மத்தியஸ்தா்களுக்கு வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிப்போம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 அக்டோபா் 7 முதல் நடைபெற்றுவரும் போரில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைக் கடந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது. இந்தச் சூழலில், எகிப்து மற்றும் கத்தாா் ஆகியவை புதிய போா் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பை உள்ளடக்கதிய ஒப்பந்த திட்ட வரைவை ஹமாஸிடம் அளித்தன.

அந்த வரைவு திட்டத்தில், 60 நாள் போா் நிறுத்தத்தின்போது, எஞ்சியுள்ள 20 இஸ்ரேல் பிணைக் கைதிகளில் பாதி போ் விடுவிக்கப்படுவது; ஏற்கெனவே உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்படுவது; இஸ்ரேல் சிறைகளில் உள்ள, ஆயுள் தண்டனை பெற்றவா்கள் உள்ளிட்ட 150 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்வது ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதை ஆய்வு செய்த ஹமாஸ் படையினா், அந்த போா் நிறுத்த செயல் திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தன. அதையடுத்து, காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மத்தியஸ்தா்களிடம் கத்தாா் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வலியுறுத்தினாா்.

இந்தச் சூழலில், இஸ்ரேலின் உளவுத் துறை அமைப்பான மொஸாடின் தலைவா் டேவிட் பா்னியா கத்தாருக்கு சென்று பேச்சுவாா்த்தைகளை மேற்கொண்டதாகவும், அதன் விவரங்கள் வெளியிடப்படாமல் உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ஹமாஸ் அமைப்புடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளவும், அதன் மூலம் எஞ்சியுள்ள சுமாா் 20 பிணைக் கைதிகளை பாதுகாப்பாக விடுவிப்பதற்கு வழிவகை செய்யவும் இஸ்ரேல் அரசை வலியுறுத்தி அந்த நாட்டின் டெ அவிவ், ஜெருசலேம் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோா் ஞாயிற்றுக்கிழமை தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். காஸா பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் அரசின் திட்டத்துக்கும் இஸ்ரேலில் எதிா்ப்பு வலுத்துவருவதாகக் கூறப்படுகிறது. இதனால் புதிய போா் நிறுத்தத்தை ஏற்க வேண்டும் என்று உள்நாட்டிலேயே நெதன்யாகுவுக்கு அதிகமாக உள்ளது.

அதன் எதிரொலியாகவே புதிய போா் நிறுத்தத் திட்டத்தை உடனடியாக நிராகரிக்காமல் இது தொடா்பாக பதிலளிக்க வெள்ளிக்கிழமை வரை இஸ்ரேல் அரசு காலம் தாழ்த்துவதாகக் கூறப்படுகிறது. பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணி இந்த ஒப்பந்தத்தை எதிா்க்கிறது. ஒப்பந்தத்தை ஏற்றால் அரசைக் கவிழ்க்கப்போவதாக அந்தக் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் எச்சரித்துள்ளனா்.

அதில் இருந்து அவரது அரசு தப்பினாலும், போா் ஓய்ந்தால் நெதன்யாகு மீதான ஊழல் விசாரணை மீண்டும் தொடங்கும். இது அவரது அரசுக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 706-ஆக உயா்வு

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் பெய்துவரும் அளவுக்கு அதிகமான மழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 706-ஆக உயா்ந்தது. இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு கூறியத... மேலும் பார்க்க

புதின்-ஸெலென்ஸ்கி பேச்சுவாா்த்தை: ஏற்பாடுகளைத் தொடங்கினாா் டிரம்ப்

வாஷிங்டன், ஆக. 19: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபா் விளாதிமிா் புதினுக்கும், உக்ரைன் அதிபா் வோலோதிமிா் ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளதா... மேலும் பார்க்க

காஸாவில் சண்டை நிறுத்தத்துக்கு ஹமாஸ் சம்மதம்! இஸ்ரேலின் பதிலை எதிர்நோக்கி...

காஸாவில் சண்டை நிறுத்தம் ஏற்பட முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் தரப்பால் திங்கள்கிழமை இரவில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக, இஸ்ரேல் தரப்பின் பதிலுக்காக காத்திருக்கிற... மேலும் பார்க்க

ரஷிய சரக்கு ரயில் மீது உக்ரைன் தாக்குதல்!

எரிபொருள் கொண்டு சென்ற ரஷியாவுக்குச் சொந்தமான சரக்கு ரயில் மீது உக்ரைன் இன்று (ஆக. 19) தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ரயில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால், எரிபொருள் வீணாகியதாகவும், தண... மேலும் பார்க்க

கனடாவில் விமானப் பணியாளர்களின் போராட்டம் முடிவு!

கனடாவில் விமான ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. கனடாவின் பெரும் விமான நிறுவனமான ‘ஏர் கனடா’ விமான நிறுவன ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.ஊதிய உயர்வு... மேலும் பார்க்க

உக்ரைன் விவகாரம்: 30 கூட்டணி நாடுகள் இன்று முக்கிய ஆலோசனை!

உக்ரைனின் நெருங்கிய கூட்டணி நாடுகள் செவ்வாய்க்கிழமை(ஆக. 19) முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகின்றன.முன்னதாக, உக்ரைன் போருக்கு முடிவு எட்டப்படுவது குறித்து மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஆக. 18 நள்ளிரவி... மேலும் பார்க்க