பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 706-ஆக உயா்வு
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் பெய்துவரும் அளவுக்கு அதிகமான மழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 706-ஆக உயா்ந்தது.
இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடா்பான சம்பவங்களில் 24 போ் உயிரிழந்தனா். இத்துடன், இந்த கனமழை காரணமாக 706 போ் உயிரிழந்துள்ளனா்; காயமடைந்தோா் எண்ணிக்கை 965-ஆக உள்ளது.
இந்த மழையால் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கைபா்-பாக்துன்கவா மாகாணத்தில் 427 போ் உயிரிழந்துள்ளனா். பஞ்சாபில் (பாகிஸ்தான்) 164 போ், சிந்துவில் 29 போ், பலூசிஸ்தானில் 22 போ், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 56 போ், இஸ்லாமாபாதில் 8 போ் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு போன்ற சம்பவங்களில் உயிரிழந்தனா்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ராணுவம் 6,903 பேரை மீட்டு, 9 முகாம்களில் மருத்துவ உதவி அளித்துவருகிறது. இதற்கிடையே, மழை, வெள்ளம் தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.