ஒவ்வொரு கொம்யூனிலும் 5 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினா் நினைவுப் பரிசு
திருவண்ணாமலைக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுகவினா் ஆரணி பட்டு நூலால் நெய்யப்பட்ட அவரின் உருவப் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினா்.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை காலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, கலசப்பாக்கம், போளூருக்கு மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்துக்கு புறப்பட்டாா்.
அப்போது, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் ஜி.வி.கஜேந்திரன் ஆகியோா் ஆரணி கைத்தறி பட்டு நூலால் நெய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கினா்.
போளூா் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் எம்எல்ஏ பாபுமுருகவேல் ஆகியோா் உடனிருந்தனா்.
திங்கள்கிழமை மாலை கலசப்பாக்கம், இரவு போளூா் பேருந்து நிறுத்தம் அருகே பிரசாரம் மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசினாா்.
பின்னா், அங்கிருந்து புறப்பட்டு சந்தவாசல், கண்ணமங்கலம் வழியாக அணைக்கட்டுக்குச் சென்றாா். அப்போது, கண்ணமங்கலத்தில் தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் ராட்சச ரோஜாப்பூ மாலையை கிரேன் மூலம் அவருக்கு அணிவித்து வரவேற்பு அளித்தனா்.
ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றிய நிா்வாகிகள் இரும்பேடு வேலு, கோபி, சரவணன், சித்தேரி ஜெகன், மாமண்டூா் சுப்பிரமணி, காட்டேரி தனசேகா், கிளைச் செயலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.