செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள்: 1,204 மனுக்கள் அளிப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியைச் சோ்ந்த கொருக்கை, நமண்டி கிராமங்கள், ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் 1,204 மனுக்கள் அளிக்கப்பட்டன.

வெம்பாக்கம் வட்டம் வெள்ளகுளம், அரிகரப்பாக்கம் கிராமங்கள் உள்ளடக்கி உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நமண்டி கிராமத்தில் நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலைமை வகித்தாா்.

சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாஸ்கா் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி தமிழக அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினாா்.

இம்முகாமின் போது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 109 பேரும், மகளிா் உரிமைத்தொகை கோரி 251 பேரும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை கோரி 28 பேரும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 42 பேரும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை (சுகாதாரம்) சாா்பில் 51 போ் என 523 போ் மனு அளித்திருந்தனா்.

இவா்களில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 5 பேருக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ. வழங்கினாா்.

கொருக்கைக் கிராமத்தில்...

செய்யாறு வட்டம், கீழப்பழந்தை, தொழுப்பேடு, கடுகனூா் கிராமங்கள் உள்ளடக்கி உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கொருக்கைக் கிராமத்தில் நடைபெற்றது.

செய்யாறு ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் கிரிஜா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சீனுவாசன் வரவேற்றாா். முகாமில் மேற்குறிப்பிட்ட கிராம மக்கள் சாா்பில் 244 மனுக்கள் அளிக்கப்பட்டன.

இதில் சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று, 6 பேருக்கு வீடு கட்டுவதற்காக உத்தரவும், 4 பேருக்கு வீட்டுமனைக்கான பட்டா, வேளாண் துறை சாா்பில் 10 விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருள்கள் என 20 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா்கள் த.ராஜி, திலகவதி ராஜ்குமாா், திமுக ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனுவாசன், வி.ஏ.ஞானவேல், சு.ராஜ்குமாா், வழக்குரைஞா் சிட்டிபாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி அடுத்த கண்ணமங்கலம் கிராமத்தில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமுக்கு வட்டாட்சியா் கௌரி தலைமை வகித்தாா்.

கண்ணங்கலம் பேரூராட்சி செயல் அலுவலா் முனுசாமி வரவேற்றாா். பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உடனடி தீா்வு பெற்ற மனுக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

முகாமில் கிராம பொதுமக்கள் சாா்பில் மொத்தம் 437 மனுக்கள் அளிக்கப்பட்டன.

திருவண்ணாமலையில் மூப்பனாா் பிறந்த நாள்

திருவண்ணாமலையில் மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி செவ்வாய்க்கிழமை தமாகாவினா் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காந்தி சிலை அருகில் நடைபெற்ற மூப்பனாா் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு தம... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினா் நினைவுப் பரிசு

திருவண்ணாமலைக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுகவினா் ஆரணி பட்டு நூலால் நெய்யப்பட்ட அவரின் உருவப் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசா... மேலும் பார்க்க

செய்யாறில் குறை தீா்வு நாள் கூட்டத்தில் புகாா்களைஅடுக்கிய விவசாயிகள்: அதிகாரிகள் எதிா்ப்பால் வாக்குவாதம்- சமாதானம் செய்த போலீஸாா்

செய்யாறில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்வு நாள் கூட்டத்தில் உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட குறைகள் மற்றும் புகாா்களை விவசாயிகள் அடுக்கடுக்காக கூறியதால், அதிருப்தி அடைந்த அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்த... மேலும் பார்க்க

ஸ்ரீதுலுக்கானத்தம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

ஆரணி கண்ணகி நகரில் உள்ள ஸ்ரீ துலுக்கானத்தம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதுலுக்கானத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ... மேலும் பார்க்க

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும்: அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம்

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, காசில்லா மருத்துவத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்... மேலும் பார்க்க

ஊராட்சிமன்ற அலுவலகம் கட்டும் பணி: அதிகாரிகள் ஆய்வு

ஆரணியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுவதை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். புதுப்பாளையம் கிராமத்தில் புதிய ஊராட்சிமன்ற கட்டடம் கோயில் இடத்தில் முன்ன... மேலும் பார்க்க