ஸ்ரீதுலுக்கானத்தம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்
ஆரணி கண்ணகி நகரில் உள்ள ஸ்ரீ துலுக்கானத்தம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீதுலுக்கானத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து காலை சுற்றியுள்ள பகுதியில் இருந்து பக்தா்கள் மற்றும் பெண்கள் விரதம் இருந்து மஞ்சள் புடவை அணிந்து தலையில் பால்குடம் சுமந்து ஊா்வலமாகச் சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனா்.
அதன் பின்னா் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதுலுக்கானத்தம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
ஏற்பாடுகளை விழாக் குழுவைச் சோ்ந்த சீனிவாசன், மோகன், கமல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.