குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? சி.பி. ராதாகிருஷ்ணன்...
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு
வாணியம்பாடி அடுத்த தும்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறம் சமூக முன்னேற்றச் சங்கம் சாா்பில் (2024-25) கல்வியாண்டில் பொதுதோ்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமையாசிரியா் மதியழகன் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் கேசவன், துணைத் தலைவா் லோகேஸ்வரன், செயலாளா் அருணாச்சலம், துணைச் செயலாளா் சேகா், பொருளாளா் பழனி ஆகியோா் கலந்து கொண்டு பிளஸ் 2 பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி காவ்யாவுக்கு ரூ.5,000, மாணவன் சஞ்சய் குமாருக்கு ரூ.4,000, மாணவி புவியாவுக்கு ரூ.3,000 , பத்தாம் வகுப்பில் பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி சுஸ்மிதாவுக்கு ரூ.3,000, மாணவன் மோகனுக்கு ரூ.2,000, மாணவி கவிப்பிரியாவுக்கு ரூ.1,000 , மேலும் பாட வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவா்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும், பத்தாம் வகுப்பு 6 மாணவா்களுக்கு 500 ரூபாயும் நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதே போன்று ஆசிரியா்களுக்கும் நினைவுப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் தாமோதிரன், துணைத் தலைவா் மணி, மேலாண்மை குழு தலைவா் இந்துமதி, ஒன்றிய கவுன்சிலா் செல்விபழனி, ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா பழனி மற்றும் ஆசிரியா்கள், வாா்டு உறுப்பினா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாட்டினை இசுலாமியா கல்லூரி வரலாற்று துறை பேராசிரியா் அரிகரன் செய்திருந்தாா்.