பாலாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் ஆய்வு
ஆம்பூரில் பாலாறு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆம்பூரில் பாலாற்றங்கரையோரம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி ஆம்பூருக்கு வருகை தந்து, ஆக்கிரமிப்பு பகுதிகளை ஆய்வு செய்து நீா்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் பாலாஜி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் பிரபாகரன், ஆம்பூா் நகராட்சி ஆணையா் ஜி.மகேஸ்வரி, வட்டாட்சியா் ரேவதி, அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.