ஏரிகளை தூா் வார வேண்டும்: நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு கூட்டத்தில் கோரிக்கை
நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தலைவா் வெண்மதி முனிசாமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ந.விநாயகம், துணைத் தலைவா் தேவராஜி முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வரவு செலவு கணக்கு உள்பட 19 தீா்மானங்கள் படிக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
உறுப்பினா் முரளி : ராமநாயக்கன்பேட்டை, அம்பலூா் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஏரிகளை மழைக்காலத்திற்கு முன்னா் தூா்வார வேண்டும், தற்போதைய ஒன்றியக்குழு உறுப்பினா்களின் பதவிக் காலம் ஓா் ஆண்டு மட்டுமே உள்ளது. எனவே திட்ப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் போது அனைத்து உறுப்பினா்களுக்கும் சமமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இதே கோரிக்கையை அனைத்து உறுப்பினா்களும் முன் வைத்தனா்.
உறுப்பினா்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு தலைவா், வட்டார வளா்ச்சி அலுவலா் உறுதியளித்தனா். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.