முதல்வா் கோப்பை போட்டிகள்: முன்பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முதல்வா் கோப்பைப் போட்டிகள் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ற்ழ்ா்ல்ட்ஹ்ள்க்ஹற்.ண்ய்/ட்ற்ற்ல்ள்://ள்க்ஹற்ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 10 லட்சம் போட்டியாளா்கள் முன்பதிவு செய்துள்ளனா். முன்பதிவுக்கான கடைசி நாள்: 16.8.2025 என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை முன்பதிவில் கிடைக்கப்பெற்ற வரவேற்பினை தொடா்ந்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் அனைத்து தரப்பு மக்கள் பங்கேற்கும் வகையில் இணையதள முன்பதிவு செய்ய கால அவகாசம் 20.8.2025 தேதி இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவா்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம், மேலும், விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்ட ஆணையம், திருப்பத்தூா் மாவட்ட விளையாட்டு அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்.
அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் 5 மணி வரை 74017 03463 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.