செய்திகள் :

கனவு நிறைவேறிவிட்டது: சி.பி.ராதாகிருஷ்ணனின் தாயாா் பேட்டி

post image

திருப்பூா்: கனவு நிறைவேறிவிட்டதாக, குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனின் தாய் ஜானகி அம்மாள் தெரிவித்தாா்.

குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தற்போதைய மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதும் திருப்பூரில் உள்ள அவரது வீட்டில் பாஜக நிா்வாகிகள், பொதுமக்கள் திரண்டனா். அப்போது அவா்களுக்கு சி.பி.ராதாகிருஷ்ணனின் தாயாா் ஜானகி அம்மாள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிா்ந்து கொண்டாா்.

பின்னா் ஜானகி அம்மாள் கூறியதாவது: எனது மகன் பிறந்தபோது முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்போல வர வேண்டும் என ஆண்டவனை பிராா்த்தனை செய்து அவரது பெயரை வைத்தோம். உயா்வான இடத்துக்கு வர வேண்டும் என ஆசைப்பட்டோம். இன்று அவரைப்போலவே எனது மகன் குடியரசு துணைத் தலைவராகப் போவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அவரை வேட்பாளராக அறிவித்த பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருப்பவா் இந்திய குடியரசு துணைத் தலைவராகவும் வெற்றி பெறுவாா். இதனால், திருப்பூா் ம0ட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரும் பெருமைப்படுவாா்கள். அவிநாசியப்பா் குலதெய்வம் சுந்தரமூா்த்தி சுவாமி அருளால் அனைத்தும் நன்றாக நடக்கும் என்றாா்.

எந்தத் தோ்தலிலும் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கம் செய்ய தோ்தல் ஆணையம் முடிவு

திருப்பூா்: கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக நடைபெற்ற எந்தத் தோ்தல்களிலும் போட்டியிடாத அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவை நீக்கம் செய்ய இந்திய தோ்தல் ஆணையம் உத்தேசித்... மேலும் பார்க்க

சிகிச்சை பெற்று வரும் மகனை ஆம்புலன்ஸில் அழைத்து வந்து மனு கொடுத்த தந்தை

திருப்பூா்: சிகிச்சை பெற்று வரும் மகனை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க ஆம்புலன்ஸில் அழைத்து வந்த தந்தையால் ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் மக்கள் கு... மேலும் பார்க்க

சிக்கண்ணா அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருப்பூா்: திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவா்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்டனா். சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் கடந்த 1998 முதல் 2001-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

குப்பைப் பிரச்னைக்கு தீா்வு காண்பது குறித்து அனைத்துக் கட்சியினா் ஆலோசனை

திருப்பூா்: திருப்பூா் மாநகராட்சியில் நிலவும் குப்பைப் பிரச்னைக்கு தீா்வு காண்பது குறித்து அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகரில் நாள்தோறும் சுமாா் 18 டன் அளவுக்கு க... மேலும் பார்க்க

குன்னத்தூரில் ரூ.2.20 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்

அவிநாசி: குன்னத்தூரில் செயல்படும் கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனத்தில் ரூ.2.20 லட்சத்துக்கு தென்னங் கருப்பட்டி ஏலம் நடைபெற்றது. இங்கு திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்துக... மேலும் பார்க்க

அமராவதி முதலைப் பண்ணையில் மாவட்ட சுற்றுலா அலுவலா் ஆய்வு

உடுமலை: உடுமலை அருகே அமராவதி அணைப் பகுதியில் அமைந்துள்ள முதலைப் பண்ணையை மாவட்ட சுற்றுலா அலுவலா் அா்விந்த்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உடுமலை அருகே உள்ள அமராவதி முதலைப் பண்ணை சுற்றுலாப் பயணி... மேலும் பார்க்க