சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
குன்னத்தூரில் ரூ.2.20 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்
அவிநாசி: குன்னத்தூரில் செயல்படும் கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனத்தில் ரூ.2.20 லட்சத்துக்கு தென்னங் கருப்பட்டி ஏலம் நடைபெற்றது.
இங்கு திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 2 ஆயிரம் கிலோ தென்னங் கருப்பட்டியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். பனங்கருப்பட்டி வரத்து இல்லை. இதில் தென்னங் கருப்பட்டி கிலோ ரூ.110-க்கு விற்பனையானது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.